Search

Dec 22, 2025

உள்ளூர்

ஜனவரி 5க்குள் தீர்வு இல்லை என்றால் போராட்டம் – ஆசிரியர் சங்கங்கள் எச்சரிக்கை

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனை முன்னிட்டு, ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இன்று (22) காலை நேரத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக பாடசாலை நேரத்தை மாற்றும் முன்மொழிவு தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

டிசம்பர் 12ஆம் திகதி தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அந்நடவடிக்கை பின்னர் கைவிடப்பட்டதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இன்றைய சந்திப்பின் போது, பிரதமர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கருத்துக்களுக்கு ஒரு அளவு கவனம் செலுத்தியதாகவும், முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All