Search

sath

Dec 28, 2025

உள்ளூர்

அநுர அரசு அவசர சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், அவசரகாலச் சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.


மேலும், ஊடகங்களை அடக்கி ஆளும் எந்த முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் மேலதிகமாக விளக்கமளித்த அவர்,
“பேரிடர் நிலை ஏற்பட்ட பின்னரே நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
மக்களுக்கு சேவை வழங்குவதில் தடையாக இருந்த காரணிகளை நீக்குவதற்காகவே அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதனால், எந்த சந்தர்ப்பத்திலும் அந்தச் சட்டத்தை எமது அரசு தவறாகப் பயன்படுத்தவில்லை,” என்று கூறினார்.

மேலும், முந்தைய ஆட்சிக் காலங்களில்தான் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெற்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஊடகங்கள் எங்களை விமர்சித்தால்கூட, அதைப் பற்றி நாம் கவலை கொள்ளமாட்டோம்.
ஊடக சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படும்,” என அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதிப்படுத்தினார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All