
janani
Mar 26, 2026
உள்ளூர்
ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
இலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார்.
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம், அணுசக்தி பயன்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





