Search

janani

May 2, 2026

உள்ளூர்

வெளிநாட்டு பயணத்திற்கு பௌத்த பிக்குகளுக்கு பரிந்துரை கட்டாயம்!

பௌத்த பிக்குகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, தமது விகாராதிபதி, பிராந்திய நாயக்க தேரர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை தேரர்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை எதிர்காலத்தில் மீண்டும் செயற்படுத்த எதிர்பார்ப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சில காரணங்களினால் இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய சில பிக்குகள் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட சாசனத்திற்கு எதிரான சம்பவங்கள் பதிவானதை அடுத்து, மகாநாயக்க தேரர்களிடம் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலில் இந்த பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All