Search

janani

Mar 21, 2026

உள்ளூர்

தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படலாம் : கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் இதுவரை முறையாக சீர் செய்யப்படாத பட்சத்தில், பேருந்து போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடையக்கூடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் டிப்போக்களில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதாகவும், இதனால் பேருந்து உரிமையாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையால் வரும் திங்கட்கிழமை பேருந்து சேவைகள் கணிசமான அளவு பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், இது குறித்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All