
janani
Mar 21, 2026
உள்ளூர்
மக்கள் நலனுக்காக இணையும் கட்சிகள்

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற இந்நாட்டின் அரசியல் ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க அவர்களினது 84 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சமூகம் இப்போது கட்சி தாவும் அரசியலையும், டொலர் கட்டுகளுக்கு நிலைமாறும் அரசியலையும் ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகைய கூட்டணிக்கும் ஒன்றிணைவுகளுக்கும் மக்கள் தயாராக இல்லை. மக்களின் ஆணையால் பெற்ற வெற்றியில் இறுதியில் வெற்றி பெற வேண்டியது பொது மக்களே ஆகும்.
மக்கள் நம்பிக்கையை, பொது மக்களின் உரிமைகளை காசுக்கு விற்ற காலம் முடிந்து விட்டது. நடுத்தர பாதை, பொது மக்கள் பாதை, மூன்றாவது பாதையை தோற்று விக்க சீரழிந்த முதலாளித்துவத்தையும், தீவிர தாராளவாத கோட்பாடுகளையும் புறக்கணித்து, தீவிர கம்யூனிசவாதம் மற்றும் சமூகவாதத்தையும் புறக்கணித்து, மனிதநேய முதலாளித்துவம் மற்றும் சமூக நீதியை நோக்கி, ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் பேணி, சம்புத்த சாசனத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கி அதனைப் பாதுகாத்து, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் செயல்படும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பின்னாளில் பல்வேறு காரணங்களால் கருத்து வேறுபாடுகளால் விரிசல் ஏற்பட்டாலும், இறுதி தருணத்தில் கூட ரணசிங்க பிரேமதாச காமினி திசாநாயக்காவுடன் இணைவதையே விரும்பினார். இவர்கள் இருவரும் ஒரே பாதையிலேயே பயணித்தனர். அது பொது மக்களின் பாதையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





