Search

Rebecca

Jan 20, 2026

உள்ளூர்

ஒரு கோடி ரூபா பெறுமதியான "குஷ்" ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான "குஷ்" ரக போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர், அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோது, இன்று அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் உணவுப்பொருள் விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒரு தொழிலதிபர் ஆவார்.

அவர் இந்த போதைப்பொருள் தொகுதியை மலேசியாவில் கொள்வனவு செய்து, அங்கிருந்து சிங்கப்பூர் வந்து, பின்னர் இன்று அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ-468 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த கைப்பைக்குள் 03 பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்த, 01 கிலோ 024 கிராம் எடையுள்ள "குஷ்" போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All