
admin
Feb 1, 2026
உள்ளூர்
வௌிநாட்டு பெண்ணின் கைப்பேசியை திருடியவர் கைது

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, அப்பெண்ணுக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசியும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






