Search

Rizi

Sep 28, 2025

உள்ளூர்

Port City முதலீடுகளுக்கு புதிய வர்த்தமானி

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களின்படி, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு துறைமுக நகரத்தில் (PORT CITY) முதலீடு செய்யும் வணிகங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகள் மற்றும் சலுகைகளின் கால அளவு தொடர்பில் ஒரு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். 

 

இந்தத் திருத்தம் "மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகங்கள்" (PBSIs) மற்றும் "மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகங்கள்" (SBSIs) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது, 2023 ஒகஸ்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கடைசி விதிமுறைகளில் வழங்கப்பட்ட சலுகைகளில் குறைப்பைக் குறிக்கிறது. 

 

2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகள் கடந்த மாதம் காலாவதியாகிவிட்டன. 

 

இதனையடுத்தே நிதி மற்றும் வரி சலுகைகளை உள்ளடக்கிய ஒரு புதிய வர்த்தமானி கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 2025 விதிமுறைகள் நான்கு குழுக்களை அறிமுகப்படுத்துகின்றன. 

 

இதில் A விதிமுறை, குறைந்தபட்சம் 300 வேலைவாய்ப்புகளுடன் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கட்டாயமாக்குகின்றது B விதிமுறை 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டையும் 300 வேலைகளையும் கட்டாயமாக்குகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp