
admin
Apr 15, 2026
உள்ளூர்
"தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்” – நாமல் ராஜபக்ச சித்திரை புத்தாண்டில் கருத்து!

ஒவ்வொருவரும் தவறு செய்வது இயல்பு. நாம் அந்தத் தவறுகளைப் புரிந்து கொண்டு, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்" என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (15) நடைபெற்ற புத்தாண்டுச் சடங்குகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூகமும் கடந்த காலத் தவறுகளை அடையாளம் கண்டு, அதேவேளை கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து முன்னேற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது எமது பகிரப்பட்ட கலாசார மரபாகும். இதனைப் பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்குக் கடத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு தற்போது ஒரு சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள போதிலும், ஒற்றுமையுடனும் நேர்மறையான சிந்தனையுடனும் அதனை முறியடிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இளைஞர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது குறித்துக் கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் மதிப்பிடக் கூடாது.
இலங்கையின் எதிர்காலம் இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்துவதிலும், தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






