Search

admin

Feb 15, 2026

உள்ளூர்

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா - வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மாத்தளை - வில்கமுவ பகுதிக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்வடைதல் மற்றும் நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அங்கிருந்து உடனடியாக வௌியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All