Search

Rebecca

Feb 21, 2026

உள்ளூர்

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற வானிலை காரணமாக, இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த விசேட அறிவித்தலானது இன்று (21) முற்பகல் 08.00 மணி முதல் நாளை (22) முற்பகல் 08.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழை நீடித்தால் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

நுவரெலியா மாவட்டம் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

பின்வரும் பகுதிகளில் மண்சரிவு அபாயம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

நுவரெலியா மவட்ட மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகள்.

பதுளை மாவட்டம் மீகஹகிவுல மற்றும் கந்தகெட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All