
SEGU
Apr 11, 2026
உள்ளூர்
முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கிராந்துருகோட்டே - தெஹியத்தக்கண்டி வீதியில், கிராந்துருகோட்டே விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பெண் பலத்த காயமடைந்து, கிராந்துருகோட்டே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் தெஹியத்தக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணாவார்.
விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் வேனில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் வவுனியாவிலிருந்து தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெறவுள்ள கலைந்துசெல்லும் அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்துள்ளனர்.
எவ்வாறாயினும், விபத்தில் வேனில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படாததுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிராந்துருகோட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





