
Rebecca
Feb 16, 2026
விளையாட்டு
அபார வெற்றியீட்டியது இந்தியா

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அணிசார்பில் இஷான் கிஷான் அதிகபட்சமாக 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
176 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது
இதன்படி இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






