Search

admin

Apr 17, 2026

உள்ளூர்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் இந்தியா பின்னடைவு

சர்வதேச நாணய நிதியம் (IMF) நடப்பு ஏப்ரலில் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் இந்தியா பின் தங்கியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் 30 டிரில்லியன் டாலருக்கும் மேல் GDP உடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 9-20 டிரில்லியன் டாலர் GDP உடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

5 டிரில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்தில் ஜெர்மனி, 4 4.5 டிரில்லியன் டாலருடன் ஜப்பான், இங்கிலாந்து நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன. 4 டிரில்லியன் GDP உடன் இந்தியா 6 ஆம் இடத்தில் உள்ளது.

முன்னதாக 2021 முதல் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இருந்து வந்தது. ஆனால் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் 6வது இடத்தில் இருந்து இங்கிலாந்து இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்துக்கு வந்துள்ளது.

இந்த உலகளாவிய GDP தரவரிசை அமெரிக்க டாலரின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது. இதில் இந்தியா பின் தங்குவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.

கடந்த ஓராண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 80இல் இருந்து 90-க்கும் மேலாக சரிந்துள்ளது. X

இந்தியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுமே 4 5 டிரில்லியன் டாலர் என்ற நெருக்கமான எல்லைக்குள் இருப்பதால், நாணய மதிப்பில் ஏற்படும் சிறு மாற்றமும் தரவரிசையைப் பாதிக்கிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90% இறக்குமதி செய்கிறது. போர்ச் சூழலால் எண்ணெய் விலை உயரும்போது, இந்தியா அதிக டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. இது ரூபாயின் மதிப்பை நேரடியாகப் பாதிக்கிறது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து நிதியைத் திரும்பப் பெற்று, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டாலருக்கு மாறுகின்றனர்.

அமெரிக்காவில் நிலவும் அதிக வட்டி விகிதங்கள் டாலரை மற்ற நாடுகளின் நாணயங்களை விட வலிமையாக்கியுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All