Search

Aug 26, 2025

உள்ளூர்

பேரூந்துகளுக்கான ஒன்றிணைந்த நேர அட்டவணை அமுலாக்கம்.

இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான மற்றும் தனியாருக்கு சொந்தமான தொலைதூர பஸ்களுக்கான ஒன்றிணைந்த நேர அட்டவணை அமுலாக்கம் நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக புத்தளம்,சிலாபம் வழித்தடத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களுக்கு இந்த செயல்த்திட்டம் செயற்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி,எ சந்திரபால் கூறினார்.

இதற்கமைய புதியத்திட்டம் பெஸ்டியன்மாவத்தை பஸ்நிலையத்தில் இருந்து செயற்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு-யாழ்ப்பாணம், கொழும்பு -மன்னார், கொழும்பு-குளியாப்பிட்டிய மார்க்கங்களில் கொழும்பு-புத்தளம்,அனுராதபுரம்,மன்னார்,யாழ்ப்பாணம் வீதிகளிலும் சேவைகளில் ஈடுபடும் பஸ்களை இணைத்து இந்த நேர அட்டவணை ஈடுபடுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகிய இரண்டு நிறுவனங்களினால் பொதுமக்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்ட சேவையை அரச மற்றும் தனியார் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடுத்த இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியலாளர் பி ,எ சந்திரபால் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All