Search

Rebecca

Dec 11, 2025

உள்ளூர்

அதிவேக வீதியில் குப்பைகளை கொட்டியவர் கைது

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளை விட்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதுவ நுழைவாயில் கட்டுப்பாட்டு உப பொலிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

வாகனத்தின் சாரதி ஒருவர் அதிவேக வீதியில் குப்பைகளை விட்டுச் சென்றதை அவதானித்த பொலிஸார் அவரை பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.

35 வயதான குறித்த நபர் சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All