Search

admin

Feb 8, 2026

உள்ளூர்

நீர்கொழும்பில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி

நீர்கொழும்பு துன்கல்பிடிய கடற்கரை வீதிக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ராஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று மாலை முன்னெடுத்த தேடுதலின் போது, குறித்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 

பிரதேசத்திலுள்ள கடற்கரை அணுகல் வீதியின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த  இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய துன்கல்பிடிய பிரதேசத்தில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

7.65 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் துன்கல்பிடிய பொலிஸ் நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All