Nivin
Aug 25, 2025
பல்சுவை
மாபெரும் வெற்றி படத்தின் நடிகர் மரணம். துயரத்தில் திரையுலகம்
மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த அதிரடி திரைப்படங்களில் ஒன்று கேஜிஎப். இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இரண்டு பாகங்களாக வெளிவந்தது.

முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதோடு இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. உலகளவில் இப்படம் ரூ. 1250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கேஜிஎப் திரைப்படத்தில் ஷெட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தினேஷ் மங்களூரு. கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் தினேஷ் மங்களூரு மரணமடைந்துள்ளார்.

உடுப்பி மாவட்டம் குந்தாபூரில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். மூளை பக்கவாதம் காரணமாக குந்தாபூர் மருத்துவமனையில் தினேஷ் மங்களூரு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் காலமானார். இவருடைய மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All