Search

janani

Apr 22, 2026

உலகம்

மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் ......

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.


சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 89.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்ததுள்ளது.


அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.32 அமெரிக்க டொலராக நிலவுகிறது.மசகு எண்ணெய்யைப் போன்றே இயற்கை எரிவாயுவின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. சந்தை தரவுகளின்படி, இதன் விலை 2.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All