Search

Rebecca

Sep 6, 2025

உள்ளூர்

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும்

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வளிமண்டவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இன்று நண்பகல் 12.08 அளவில் அ{ஹங்கல்ல, எல்பிட்டிய, அமுகொட, தவலம, தெனியாய, ஊருபொக்க, எம்பிலிபிட்டிய, சூரியவெள, பெரலிஹெல மற்றும் கல்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All