
janani
Mar 16, 2026
உள்ளூர்
ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு கொழும்பு, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் வீதி நாடகம் ஒன்றை அரங்கேற்றியதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





