
admin
Mar 14, 2026
உள்ளூர்
முன்பள்ளி வகுப்புகள் இணையவழியில் நடத்துவதற்கு தடை

சிறுவர்கள் 3-5 வரையிலானவர்களுக்கு ,இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்காகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்படும் இணையவழி கருத்தரங்குகள் தொடர்பாக பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு குழந்தையின் சிறந்த ஆசிரியர் சூழலும் நேரடி அனுபவங்களுமே தவிர டிஜிட்டல் திரை அல்ல என்றும் அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பிள்ளைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோராக அதிக அவதானம் செலுத்தி செயற்படுமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






