Search

Rebecca

Sep 10, 2025

உள்ளூர்

எல்ல விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி இரவு, தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏற்றிச் சென்ற பேருந்து சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது பேருந்து, எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All