Search

janani

May 2, 2026

உள்ளூர்

8 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் பதிவாகியுள்ளன. 

இது 2024 மற்றும் 2018 ஆகிய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. எவ்வாறாயினும், 2026 மார்ச் மாதத்தில் இந்த நேர்மறையான போக்கில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகை 183,979 ஆகக் குறைந்துள்ளது. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே இந்தத் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All