2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவ ADB உறுதி

உள்ளூர்February 13, 2026 · 6 months முன்1

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் (Shannon Cowlin) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கவ்லின், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில், இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வதிவிடப் பணிப்பாளரை ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்தியப் பணிப்பாளர் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்து தூதுக்குழுவினர் தமது திருப்தியை வெளியிட்டனர்.

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எட்டப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், குறிப்பாகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்குப் புலப்படும் வகையில் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மலையகப் பிரதேசங்களில் நிலவும் நீண்டகாலச் சூழலியல் பாதிப்புகள் குறித்து விளக்கிய ஜனாதிபதி, அச் சூழல் மண்டலங்களை மீட்டெடுத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வாழ்வாதாரங்களை அமைத்துக்கொடுத்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இச்சவால்களை எதிர்கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு முதல் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள், எதிர்பார்க்கப்படும் வரவுசெலவுத் திட்ட ஒத்துழைப்பு மற்றும் இவ்வருட நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரின் இலங்கை விஜயம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.