2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

8 இலட்சம் ரூபா செலவில் காதலர் தினம் கொண்டாடியவர் கைது

உள்ளூர்February 21, 2026 · 6 months முன்0

எட்டு இலட்சம் ரூபா செலவு செய்து காதலர் தினம் கொண்டாடிய நபர் ஒருவர் கம்பஹா பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையிட்டு அவற்றை அடகு வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சந்தேகநபர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாதவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பல அடகுக் கடைகளில் அவர் அடகு வைத்த நகைகளை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர் கடந்த 12ம் திகதி வீடொன்றில் கொள்ளையடித்த தங்க நகைகளை அடகு வைத்து பெற்ற 8 இலட்சம் ரூபாவினை செலவு செய்து 14ஆம் திகதி அவருடைய மனைவியுடன் காதலர் தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.