2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது.

உள்ளூர்January 2, 2026 · 7 months முன்0

இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நேற்று (01) இரவு கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமடோர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, அவர்கள் பயணித்த மீன்பிடி படகும், மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.