2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

நாய் குரைத்ததால் தகராறு: பெண் மீது தாக்குதல்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்1

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண் ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் வல்மில்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று (17) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொகரெல்ல – மெதலந்த சந்திக்கு அருகிலும் பெண் ஒருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக அந்தப் பெண்ணின் இரு மகன்கள் உள்ளிட்ட குழுவினரே இத்தாக்குதலை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளைக் கோகரெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண் ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் வல்மில்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று (17) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொகரெல்ல – மெதலந்த சந்திக்கு அருகிலும் பெண் ஒருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக அந்தப் பெண்ணின் இரு மகன்கள் உள்ளிட்ட குழுவினரே இத்தாக்குதலை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளைக் கோகரெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.