2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்

உள்ளூர்April 10, 2026 · 4 months முன்1

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவ குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு மாணவனும் சென்றுள்ளார். 

அதைக் கண்ட அந்த மாணவியின் நண்பர் (உயிரிழந்த மாணவர்), அவளுக்குப் பின்னால் சென்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அந்த நேரத்தில், தாக்குதலுக்குள்ளான மாணவனின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவரை ஹோட்டல் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த நேரத்திலேயே குறித்த மாணவர் உயிரிழந்திருந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார். 
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.