2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

ஜனாதிபதிக்கு எதிராக – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம். #video

உள்ளூர்August 14, 2025 · 1 year முன்1

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெரும் திரளான மக்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உரையாடலின் போது, இரண்டு வாரங்களுக்கு முன்பு விவாதிக்கப்பட்ட பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு வழங்கத் தவறியதால் போராட்டம் நடத்தப்படுவதாக வசந்த முதலிகே கூறினார்.

“எங்களுக்கு இன்று பதில் தேவை. நீங்கள் எங்களிடம் பொய் சொல்ல முடியாது. இன்று ஜனாதிபதியின் செயலாளருடன் எங்களுக்கு ஒரு கலந்துரையாடல் தேவை. பேச்சுவார்த்தைக்கான திகதியை ஜனாதிபதி முன்னர் உறுதியளித்தார். நிலைமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியதால், நாங்கள் இன்று வந்துவிட்டோம்,” என்றும் வசந்த முதலிகே பொலிஸ் அதிகாரியுடன் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.