Search

admin

Apr 21, 2026

உள்ளூர்

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7 வது ஆண்டு நினைவேந்தல் சீயோன் தேவாலயம். காந்திபுங்கா, கல்லடி பாலம் நினைவு தூபிகளில் பலத்த பாதுகாப்புடன் சுடர் ஏற்றி அஞ்சலி...

மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7 வது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (21) தேவாயத்தின் முன்னாலும். காந்திபூங்கா, மற்றும் கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகளில் பாலத்த பாதுகாப்புக்கு மத்திலில் கண்ணீர் மல்க மலர் வைத்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் கவனயீர்பு ஆர்பாட்டதில் ஈடுபட்டனர்.

2019ம் ஏப்பில் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினுள் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கவராத அமைப்பை சேர்ந்தவர்களான ஸாரான்காசீம் தலைமையிலான குழுவினரால் தற்கொலை குண்டுதாக்குதல் நடாத்தப்பட்டது இதில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் இருககண்களையும் இழந்ததுடன் 2 பேர் இடுப்புக்கு கீழ் இயங்காது நிலையில் படுக்கையில் இருந்துவருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9.05 மணிக்கு ஆரம்பித்தது இதில் மட்டு சீயோன் தேவாலயத்துக்கு முன்னால் பாதி;கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் மலர்தூவி சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2019 ஏப்பிர் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் தனது சிறுவனான மகன் உட்பட ஒரே குடும்பத்தில் 3 பேர்; உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் கண்பார்வை இரண்டையும் முற்றாக இழந்து பாதிக்கப்பட்டுள்ள உறவினர் உயிர்நீத்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி மலர் வைத்து சுடர் ஏற்p மௌன அஞ்சலி செலுத்தினார்

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All