Search

Rebecca

Jan 3, 2026

உள்ளூர்

இளைஞன் மீது தாக்குதல்

தீவக பகுதியில் மாடுகளை களவாடி, சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால், மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாரந்தனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், தீவகம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் மற்றும் மாடுகள் களவாட்டப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார்.

குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடுகளை களவாடி இறைச்சியாக்க முற்பட்ட கும்பல் ஒன்றினை மடக்கி பிடித்து, அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கடையொன்றுக்கு சென்ற சமயம், மாடுகளை களவாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் மது போதையில் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குலுக்கு இலக்கான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All