Search

admin

Mar 28, 2026

உள்ளூர்

போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

புறக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போதே பஞ்சிகாவத்தை பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவரிடமிருந்து 710 கிராம் 603 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 934 கிராம் 575 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 300 கிராம் 575 மில்லிகிராம் 'ஹேஷ்' போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்துடன், 300 போதை மாத்திரைகள், ஒரு மின்னணு தராசு, பணம் எண்ணும் இயந்திரம், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக நம்பப்படும் 8,59,730 ரூபாய் பணம் மற்றும் 06 கைப்பேசிகளும் அந்தப் பெண்ணிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் இன்று (28) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All