Search

janani

Mar 30, 2026

உள்ளூர்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் எச்சரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சமூக வலைதளங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்கள் ஊடாக நம்பமுடியாத அளவிலான தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, செலவு அட்டை (Credit card) விபரங்களைத் திருடுதல்.

உத்தியோகபூர்வ நிறுவனங்களின் சின்னங்கள் மற்றும் வடிவமைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் ஊடாக மக்களை ஏமாற்றுதல். எக்காரணம் கொண்டும் உங்களின் இரகசியக் குறியீடுகளை அந்நியர்களுக்கு வழங்க வேண்டாம்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் நிகழ்ந்தால், அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All