Search

admin

May 30, 2026

உள்ளூர்

உலகெங்கும் ஒளிரும் விசாகப் பூரணை!

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள், புத்தரின் மும்முறைப் பிறப்பு நிகழ்ந்த இன்றைய விசாகப் பூரணை நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

பௌத்தர்களின் மிக முக்கிய பண்டிகையான "விசாகப் பூரணை தினம்" இந்தியாவில் புத்த பூர்ணிமா அல்லது புத்த ஜெயந்தி என்று அழைக்கப்படும் நாள் ஆகும்.

பௌத்த மதத்திற்கு மட்டுமன்றி இந்து மதத்திற்கும் மிக நீண்ட வரலாற்று மற்றும் ஆன்மீகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இந்து மதத்தின் வைணவ கோட்பாடுகளின்படி, கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் 9 ஆவது அவதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.

இலங்கையில் விசாகப் பூரணை தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகையாகும்.

வீடுகள், வீதிகள் மற்றும் விகாரைகளில் விசாகக் கூடுகள் (Vesak Lanterns) களிமண் விளக்குகள் மற்றும் மின்விளக்குகள் ஏற்றி ஒளியூட்டுவர்.

வீதியில் செல்வோர் மற்றும் யாத்திரிகர்களுக்கு இலவசமாக உணவு, பானங்கள், ஐஸ்கிறீம் போன்றவற்றை வழங்கும் தர்மச் செயல்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்படும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All