Search

Jino

Aug 29, 2025

உள்ளூர்

மன்னாரில் கையெழுத்து போராட்டம்.

செம்மணி - இலங்கையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி களுக்கும், நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.

- இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை நாம் ஒரு ஒருபோதும் மறந்து விட முடியாது.

எமது இனத்தை அழித்தவர்கள்,உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கையெழுத்து போராட்டத்தில் அருட் தந்தையர்கள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,பொது மக்கள்,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்ட மை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp