Search

Rebecca

Dec 2, 2025

உள்ளூர்

இரங்கல் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி

திட்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு இரங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். கடிதமொன்றின் ஊடாக இந்த இரங்கல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மனித உயிர்கள் மற்றும் பாரிய சொத்து சேதங்களை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் இணைந்திருக்குமெனவும், அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்களினால் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதுடன் இலங்கையர்கள் இதிலிருந்து மீள்வதற்கு தேவையான உள, உடல் பலத்தை அவர்கள் பெற வேண்டுமெனவும் தாம் பிரார்த்திப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All