Search

Rebecca

Jan 16, 2026

உள்ளூர்

டுபாயில் கைதான பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் நாட்டிற்கு!

டுபாயில் மறைந்திருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் மற்றும் நிதி மோசடி விசாரணைக்காகத் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர், விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (16) அதிகாலை 05.20 மணியளவில், டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ருடு-226 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் 52 வயதுடைய ரவீன் சமிந்த வீரசிங்க அல்லது ‘புஞ்சா’ என்பவர் அடங்குகிறார். இவர் எல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மற்றொரு நபர் கிரிஅல்தெனியகே டொன் ரசிக சஞ்சீவ குமார அல்லது ‘சூட்டி மல்லி’ எனப்படுபவர். இவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல், கப்பம் கோருதல், கொள்ளை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள்.

இவர்களுடன் மேலதிகமாக, நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைக்காகத் தேடப்பட்டு வந்த இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஹேவா கசகாரகே ருஜா நிஷாமனி த சில்வா என்பவரும் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று (16) காலை பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (ஊஐனு) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All