
Rebecca
Jan 24, 2026
உள்ளூர்
போதைப்பொருளுடன் இருவர் கைது

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் வயது(52) உட்பட அவருக்கு உதவிய சந்தேக நபர் வயது (54) ஒருவரும் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை, ஒலியமுல்ல பகுதியில் வைத்து 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், இந்த குற்றத்திற்கு உதவிய மற்றைய சந்தேகநபர் மீகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இன்று (24) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






