Search

admin

Jan 26, 2026

உள்ளூர்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பொகவந்தலாவ, டிங்சிங்வத்தை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All