Jino
Sep 26, 2025
உலகம்
"ரகசா" புயல் தாக்கம்: சீனாவில் பெரும் சேதம், வியட்நாமை நோக்கி நகர்வு.
தென் சீனக் கடலில் உருவான "ரகசா" புயல், தாய்வானை கடந்து சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை கடுமையாக தாக்கியுள்ளது. மணிக்கு 265 கிமீ வேகத்திலான பலத்த காற்றும் கனமழையும் காரணமாக, 20 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யபட்டன, மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 10,000 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 5 இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக தற்போது "ரகசா" புயல் வியட்நாமை நோக்கி நகர்ந்து செல்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All