Jino
Oct 12, 2025
உலகம்
அமெரிக்க வரி விதிப்பு - சீனா பதிலடி.
"நாங்கள் போராட பயப்படவில்லை. எதிர் நடவடிக்கை எடுப்போம்" என அமெரிக்காவின் 100 சதவீத வரி அறிவிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக நேற்று (11) ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
- இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கிறது. எதிர் நடவடிக்கை எடுப்போம்.
அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு சீனாவின் நலன்களுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கிறது. இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையைப் பலவீனப்படுத்துகிறது. சீனா போராட விரும்பவில்லை. ஆனால் போராட பயப்படவில்லை.
அமெரிக்கா தனது போக்கில் தொடர்ந்தால், சீனா அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All