Jino
Sep 4, 2025
உலகம்
டிரம்பின் உத்தரவு ரத்து !
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவான அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்த அதிபர் டிரம்பின் உத்தரவை ரத்துசெய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கா மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகத்திற்கு அதிபர் டிரம்ப் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அவற்றை ஏற்க ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டதால் அப்பல்கலைக்கழகத்திற்கு அளித்து வந்த, $2.2 பில்லியன் நிதியுதவியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் உத்தரவிட்டார்.
மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வரி விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனை எதிர்த்து பாஸ்டன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதிபர் டிரம்பின் உத்தரவு சட்டவிரோதமானது என்று அதிரடியாக ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All