
SEGU
Feb 12, 2026
உள்ளூர்
பாராளுமன்ற செயல்பாடுகளில் CII வகிக்கும் பங்கு என்ன..!

CII பாராளுமன்ற செயல்பாடுகளில் தனித்துவமான அமைப்பாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து அறிவிக்கும் நிகழ்வில் CII பாராளுமன்ற செயல்பாடுகளில் வகிக்கும் பங்கை விளக்கியதோடு கட்சி தாண்டிய ஒத்துழைப்பின் அவசியத்தை மற்றும் , கடுமையான தீவிரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினேன். அத்துடன் அனைவரையும் உள்ளடக்கும் மற்றும் பரந்த ஆலோசனையுடன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்கும் செயல்முறையின் அவசியத்தையும் எடுத்துரைத்தேன்.
Westminster Foundation for Democracy (WFD) ஆதரவுடன் செயல்பட்ட Coalition for Inclusive Impact (CII) தற்போது தனித்துவமான அமைப்பாக மாற்றம் பெற்றதை 09 பெப்ரவரி 2026 அன்று கொழும்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் CII-யின் எதிர்காலத் திட்டங்கள், முக்கிய முன்னுரிமைகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றிய தகவல்கள் அரசியல் தலைவர்கள், குடியியல் அமைப்புகள் மற்றும் அபிவிருத்தி கூட்டாளர்களுடன் பகிரப்பட்டன.

பிரித்தானிய உயர் ஆணையத்தின் துணை உயர் ஆணையர் Theresa O’Mahony அவர்கள், இலங்கையில் நல்லாட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் WFD வழியாக ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தார்.
நிகழ்வின் போது CII தனது முக்கியத் தலைமைத்துவ திட்டமான Inclusive Political Leaders Academy (IPLA) 2026-ஐ அறிமுகப்படுத்தியது. அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான இந்தப் பயிற்சி திட்டத்தில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி, வழிகாட்டல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடி பணியிட அனுபவ வாய்ப்புகள் வழங்கப்படும்.

CII இணைத் தலைவர் Dilakshinee Angunawela அவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்தினார். WFD 2022 பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் CII-யை நிறுவியது. 2024 முதல் இது சுயாதீன அமைப்பாக செயல்பட்டு, பொருளாதாரச் சேர்க்கை, அரசியல் பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






