Search

Nivin

Aug 15, 2025

பல்சுவை

50 வருட திரைப்பயணம் - அறிக்கை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்!

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இன்றுடன் அவரது திரைப்பயணத்தில் 50 வருடங்களை நிறைவு செய்கிறார்.

- அதற்காக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்,

அவ் அறிக்கையில், “எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தையொட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் நன்றிகள்.

மேலும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp