Search

Jino

Sep 19, 2025

பல்சுவை

மறைந்த ரோபோ சங்கருக்கு பல பிரபலங்கள் இரங்கல்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மீண்டு வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு "காட்ஸ் ஜில்லா" படப்பிடிப்புதளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றவர் அவர் உடல் நிலை மோசமானது.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46 ஆகும். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு இன்று கொண்டு வரப்பட உள்ளது. இறுதி சடங்குகள் நாளை நடைபெறவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ரோபோ சங்கர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp