Search

Jino

Sep 21, 2025

பல்சுவை

"ஜனநாயகன்" குறித்து ஹெச்.வினோத் கருத்து.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "ஜனநாயகன்". அரசியல் பிரவேசம் காரணமாக சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார். இது தளபதி விஜய்யின் கடைசி படமாகும்.

இதனால் "ஜனநாயகன்" படத்தை திரையில் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி என பலரும் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், "ஜனநாயகன்" படத்தின் இயக்குநர் ஹெச். வினோத், முதல் முறையாக படம் எப்படி வந்திருக்கிறது? ரசிகர்கள் எதை எதிர்பார்த்து படத்திற்கு வரலாம் என்பது குறித்து விழா மேடை ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

- இது குறித்து இயக்குநர் ஹெச். வினோத் தெரிவிக்கையில்,

இதில், "இது விஜய் சாரோட பக்கா Farewell படம். So, மாஸ், கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் இந்த மூன்று விஷயங்களை எதிர்பார்த்து வாங்க. இது கம்ப்ளீட் மீல்ஸ்-ஆ இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

"ஜனநாயகன் " திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ள நிலையில், உலக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்ப்பார்த்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp