Search

SEGU

Oct 18, 2025

உள்ளூர்

சம்பள உயர்வு ?முதலாளிமார் வரவில்லை-செந்தில்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான நேற்று பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்ட போதிலும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளாதது பெரும் வேதனையளிப்பதோடு, கண்டிக்கத்தக்க விடயமாகவும் உள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கம்பனியின் வளர்ச்சிக்காக தோட்டங்களில் முழுமையாக உழைக்கும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்படும் கம்பனிகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

கம்பனிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கும் இ.தொ.கா தயாராக இருப்பதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All