Search

SEGU

Oct 10, 2025

உள்ளூர்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். 

மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 

மு.ப. 11.30 - பி.ப. 3.30 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன, 

(i) ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் (கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி). 

(ii) இலங்கைப் போக்குவரத்து சபையை வலுப்படுத்துவதற்காக உரிய முறையியலொன்றைத் தயாரித்தல் (கௌரவ சமிந்த விஜேசிறி). 

(iii) இனங்களின் அல்லது மதங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்குப் பெயரிடுவதைத் தடை செய்தல் (கௌரவ ரவி கருணாநாயக்க). 

(iv) பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நகரங்கள் அமைந்துள்ள சூழல் கட்டமைப்பை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல் (கௌரவ ரீ.கே. ஜயசுந்தர). 

(v) பாடசாலைக் கலைத்திட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுக்கவியல் விடயதானங்களை உள்ளடக்குதல் (கௌரவ ருவன் மாபலகம). 

(vi) தேசிய மருந்துகள் தர உத்தரவாத ஆய்வுகூடத்தை உரிய முறையில் தொழிற்படவைப்பதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் (கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன). 

(vii) விவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டமொன்றை ஆரம்பித்தல் (கௌரவ ரோஹண பண்டார). 

பி.ப. 3.30 - பி.ப. 5.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19(2) இன் பிரகாரம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சுதந்திரத்தை உறுதி செய்ய சபையின் தலையீட்டைக் கோருதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி). 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All